இறைவன்
இறைவனின் இருப்பு
இறப்பவர்க்கும்
இரப்பவர்க்கும்
புரியும்?
சரியா? தவறா?சந்தேகங்கள்
ஆடம்பர ஆன்மீகங்கள்
அரக்கத்தன மதபேதங்கள்
ஆள் சேர்க்கும் ஆரவாரங்கள்
தவிர்த்து
அமைதியின் ஆழமாய்
பொறுமையின் பொக்கிஷமாய்
உண்மையின் உள் மனமாய்
உன்னை நாடு
உன்னையே உன்னதமாய்
உயர வைக்கும்
உடல் தாண்டி உளம் காணும்
நல சிலிர்ப்பாய் ஓர் நிர்மலம் நிம்மதி
அதுவே இறைவன் என்றால் மிகையா?