இனிய அதிகாலை

மங்கி மறைந்த கதிரவன் !
மயக்கம் எனும் மறைப்பை நீக்கி
மகிழ்ச்சி பொங்கும் மலர்ந்த
மலராய் மறுரூபம் எடுப்பது
இனிய அதிகாலை பொழுது!

இந்நாள் நன்னாளாக அமைய!
துன்பங்கள் மறைந்து
இன்பங்கள் பெருக
புதிய சுறுசுறுப்பை தருவது
இனிய அதிகாலை பொழுது!

விடியல்கள் தோன்றுவதே!
விடாமுயற்சியை விடாமல்
இருக்கவே என்ற
புத்துணர்ச்சியையும் !
புதிய இன்பத்தையும் தருவது !
இனிய அதிகாலை பொழுது!

இரவுகள் வருவது நம்மை காக்க
பகல்கள் வருவது நம்மை வளர்க்க-எனவே
திகழ்ந்திடுவோம் நாமும் !
பிறர்க்கு உதவிடும் விடியல்களாய்!-என்றும்
இருந்திடுவோம் மறையாத சூரியனாய் !

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (4-Sep-14, 7:58 pm)
Tanglish : iniya athikalai
பார்வை : 3398

மேலே