திருமண வாழ்த்து
கடலுக்கு கீழ் திறக்காத
சிப்பிக்குள் ஓர் " முத்தும் "
யாரேனும் கொள்ளைக் கொள்வான்
என்று கழுத்தில் ஏங்கிய ஓர் " முத்தும்"
சந்தித்த வேளையில்
கைக் கோர்ந்தது முத்தத்தின் சத்தமே !
காலத்தின் யுத்தத்தின் இடையே
பூத்தது காதலின் பந்தமே !
சிறுவிரல்கள் சேர்கையில்
பிறந்ததோர் சொந்தமே!
சொந்தத்தின் விளைச்சலில்
அறுவடைந்தது "இரு" தங்கமே !
அன்பால் இணைந்ததால்
மகிழ்ச்சி கடல் பொங்குமே!
சொர்கமே வாசல் வந்து
உங்களை கெஞ்சுமே!
இந்நாள் போல்
எந்நாளும் மறவாமல் தோன்றுமே !
செப்டெம்பர் திங்கள் 3அம் நாள்
மறவாமல் நிற்குமே !
வல்லோனின் ஆசியும்
உம்மை வந்து சேருமே!
பாரிலுள்ள தெய்வம் யாவும்
உம்மை வந்து வாழ்த்துமே!