முகநூல் வேடிக்கைகள் சில---சர்நா---
**************************************
பொழுதைக் களிப்பதும்
வெறுமையைக் கழிப்பதும்
வினோத உவகை.
விந்தைச் செய்கை.
***************************************
சிறுவட்டமும்
பெருவட்டமும்
மா வட்டங்களாய்
உலவும்
பலகோணச்
சங்கிலியில்
மனங்கள்...
****************************************
தமிழ் கொஞ்சியினி
சாகடிக்கலாம்(!)
சாகுமென்பதெல்லாம்
வஞ்ச வசவு....
****************************************
எல்லோரையும்
குறைந்தபட்சமாக
பின்னூட்டமாவது
எழுத வைத்த
முதல் புத்தகம்
இந்த முகப்புத்தகம்.......
****************************************
சமவெளியில்
தொடங்கி
மலையேறி
சிறகொடிகிறது
“கருத்துகள்”
நீண்டும், மீண்டும் ....
***************************************
காதறிவை மிஞ்சிய
கண்ணறிவு
தூரம் தொலைத்து,
பக்கம் பக்கமாக
வரலாறுகாணா
பொழுதுகளாக...
***************************************
படிச்சாலும்
புடிச்சாலும்
அடிச்சாலும்
வலிச்சாலும்
லைக்கு மட்டும்தான்
கணக்கு......
****************************************
“லைக்”கிற்க்கும்,
கமேண்டுக்கும்-நீயா நானா
சலித்துக்கொள்கிறது “ஷேர்”
*****************************************
பொக்குனு சிரிச்சு,
பொசுக்குனு கோவிச்சு
அதுக்குள்ள அடுத்தடுத்து,
அடுத்தடுத்து
"ஹாங்........... இதோ
வந்துட்டேன்னு" ஓடணும்.....
******************************************
ஆனாலும்
"எதுவும்
கடந்து போகும்"...
*******************************************
(மீள்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
