குருவே திரு
மலர் கொய்து - அதை
அழகாய் தொடுத்தன மென் கரங்கள்!
உதடுக ளோதின,
நாதன்நாமம் நயமுடனே!
நீறு, நெற்றியில் துலங்க
ருத்ராக்கம், மார்பி லசைந்தாட,
ஆலயம் நோக்கி
அடிவைத்தனவென் பாதங்கள்!
மனமா(சு)சை பீடத்தில் பலியிட்டு,
நெற்றியில் குட்டி,
வெற்றியருளும் மூலமுதல்வனின்
தாள்முதல் பணிந்து,
தலைகவிழ்ந்து கரம் குவிய,
நந்தி தேவனின் கொம்பிடை நோக்கினே னங்கே,
லிங்கத்தின் முன்னே இலங்கினார் எம்குரு, சிரித்தவாறே!
***************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
(செப்டம்பர் -5: ஆசிரியர் திருநாள்.
வாழ்வு யாதென்பதையும், வாழ்தலின் வழியது யாதென்பதையும் உள்ளம் உணர உய்விக்கும் மனத்தொடு மகிழ்வுடன் போதித்த எனது குருவடிகள் அனைத்திற்கும் சிரம் பணிந்த வணக்கங்கள் அன்பார்ந்த நன்றிகளுடன்.....!!)