பெண்களும் கண்களும்

பெண்களும் கண்களும் சம்மந்தபட்டது
ஆம் இதில் வக்கிர கண்களும்
வசீகர பெண்களும் சம்மந்தம் உண்டு

கூச வைக்கும் கண்களும்
கூனி நிற்க்கும் பெண்களும்
சம்மந்தபட்டது

ராவண கண்களும்
சீதை பெண்களும் சம்மந்தபட்டது

ராமன் கண்களும்
சூர்ப்பநகை பெண்களும் சம்மந்தபட்டது

சீதை இங்கு
புலம்புகிறாள்
ராமன் அதை
மறுக்கிறான்
ஆனால் ராவணனும் உண்டு
சூர்ப்பநகைகளும் உண்டு
புரிந்து கொள் மனமே

மனித உரு மிருகங்களும்
ஜனனம் காண்கின்றனர்
மண்ணில்
திரெளபதிகளுக்கு உதவும்
கண்ணன்கள் தான் கண்டும்
காணாது போகின்றனர்
கதறலொலி கேட்டும்

பண்பாடுகளின் மாற்றத்தில்
கலாச்சாரங்களின் மாற்றத்தில்
ஆற்றிலும் சேற்றிலும் ஓர் கால் பதித்திருக்கும் வேளையில்
சீர்குலைக்கபடும் சீதைகளும்
சீரிழந்த ஆடைகளுக்கு
அடிமாறும் ராமன்களும்
இயல்பானது இங்கே
இதற்கு பதில் சொல்ல
யார் இயலும்

பண்பாடு காத்தல் வேண்டும்
கலாச்சாரம் காத்தல் வேண்டும்
இல்லை அடியோடு நம் பண்பாட்டை
அகற்றிட வேண்டும்
இரண்டில் ஒன்று செய்
தவறு ஒழியும் அல்லது
அது தவறில்லை என்று புதியது மொழியும்

எழுதியவர் : கவியரசன் (5-Sep-14, 12:41 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : pengalum kangalum
பார்வை : 79

மேலே