திருமணம்

புரிதலற்று போனதோ
திருமணங்கள் புனிதமற்று போனதோ.......?
இருவர் இணையும்
கூட்டிலே
பொறாமை கூடு கட்டி
ஆடுதோ.........?
கரம் பிடிக்கும் வாழ்விலே
மகிழ்ச்சி வளர
உரம் தெளிக்க வில்லையோ...?
திறன் கொண்ட ஆளுமை
மற்றதை சிரம் சாய்க்க எண்ணுதோ.......?
விட்டு கொடுத்து வாழ்வதை
யாரும் கற்று தரவில்லையோ....?
முட்டிக் கொண்டு
முறிவதை சமூகம்
தட்டி கொடுத்து போகுதோ.....?
வெட்டி வீரம் காட்டியே
உறவை வெட்டி விட்டு போகுதே
கட்டில் கூட இன்றுதான்
கட்டுப்பாடு தாண்டுதே
இதையெல்லாம்
பார்க்க பார்க்க வாலிப
ஆசை எல்லாம் வற்றுது
பிரம்மன் படைத்த இயல்பினை
மறுத்து மனம்
பிரம்மச்சரியம் தேடுது