கலித்தாழிசை

திரைமறைவினில் தினம்நடந்திடும்
எதுஎதையுமே நிதமறிந்திடும்
மறைஉரைதரும் நிறைஅறிவொளி
முகமதுநபி வரமெனத்தரும்
தருமறைஅதில் தகுவிதம்தனில்
ஒருமுறையல பலமுறையுமே
குறைபடுபவன் மனஒருமையில்
எனைஇரந்திட வரந்தருவனே
மனமிலங்கிடும் துயரெனும்பிணி
தினமழிந்திடும் நினதருள்பெற
கணமிதுநினை! கரம்பிடிஎனை!
சினமதுமற ! சிறப்புறவருள்
பணமெனுமொரு பயன்படுபொருள்
குணமிலிபெற குறைநிகழுமே
எனைஉருகிட மனமுடைந்திட
செயும்பணமதை நிறைகொடுத்திடு
ரகுமானே,
உனதருளையே உளம்நினைந்திடும் அடியேனை
கரம்பிடித்திடு நலம்கொடுத்திடு விரைவினில் இந்நாளே

எழுதியவர் : அபி மலேசியா (5-Sep-14, 3:55 pm)
பார்வை : 541

மேலே