சீதேவியுன் மூதேவியும்

சீதேவியும் மூதேவியும்
செல்வமலை ஓர் ஆன்மீகர் புதிய வீடு கட்டினார். மறுநாள் காலையில் புதுமனை புகுவிழா. தம் வீட்டிற்குள் எப்போதும் சீதேவி இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக ஒரு திட்டம் தீட்டினார். அத் திட்டத்தின்படித் தம் வேலைக்காரி சீதேவியை அழைத்து, “சீதேவி….! நாளைக்கு அதிகாலை ஐந்து மணிக்கு என் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று நீ கதவைத் தட்ட வேண்டும். நான் யார் கதவைத் தட்டுவது எனக் கேட்பேன். உடனே ‘நீ சீதேவி வந்திருக்கிறேன்’ எனச் சொல்ல வேண்டும். நான் உடனே கதவைத் திறந்து, ‘சீதேவி…! உள்ளே வாவா’ எனக் கூப்பிடுவேன். நீ உன் வலது காலை எடுத்துவைத்துச் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் வர வேண்டும்.” எனத் தம் திட்டத்தை விளக்கினார்.
மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்குக் கதவு தட்டப்படும் சத்தம்
கேட்டது. செல்வமலை ஓடிப் போய், ”யார் கதவைத் தட்டுவது?” எனக் ஆவலோடு கேட்டார். அதற்கு வெளியிலிருந்து வந்த பதில்:
“நான்தான் சீதேவியின் அக்கா வந்திருக்கிறேன். கதவைத் திறங்கள்.”
இந்தப் பதிலைக் கேட்டவுடன் அவருக்கு மயக்கம் வராத குறைதான்.
“ஐய்யோ…! என்ன சீதேயோட அக்காவா….? அங்கே நிற்காதே. உடனே ஓடிப் போய்விடு. உடனே ஓடிப் போய்விடு.” எனச் சினந்து சீறினார் செல்வமலை.
சீதேவியின் அக்கா, மூதேவி அல்லவா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : பேராசிரியர் வெ. அரங்கராசன (5-Sep-14, 6:37 pm)
சேர்த்தது : Arangarasan V
பார்வை : 153

மேலே