அன்புள்ள நியந்தாவுக்கு 7

குரல்களில்.......

கோபமும்...... கம்பீரமும்..... கேள்வியும் பதிலுமாக.......

இங்கு தான்.. எங்கேயோ பக்கத்தில் இருந்து தான் சத்தம் வர வேண்டும்.. மனம் கூர்மையானது....


உனக்கென்ன.... எங்கயாது ஓடி ஒளிஞ்சுக்கற... வந்து பீல்ட் வொர்க் பண்ணிப் பாரு அப்போ தெரியும்....

என்ன மாப்ள புரட்சிகரமான தமிழ் படம் ஏதும் நை ட் பாத்தியா.....இந்த பொல பொலக்கர...

யோவ்.... ஒரு கடவுள் மாரி பேசு.... உன் கூட கூட்டணி போட்டேன் பாரு.. என்ன உதைக்கணும்....

கூல் டா.... இப்ப என்ன ஆகிடுச்சுனு இப்படி குதிக்கற...

என்ன ஆகணுமா.... நீயும் நானும் ஒன்னு தான... நீ ஒளின்னா நான் உன் துகள்... உன் ஆழ்மனசொட வெளிப்பாடு தானே நானு.... பின்னா ஏன்யா... அடி திட்டு நக்கல் நய்யான்டின்னு எல்லாமே எனக்கு மட்டும்.... ஒரு அம்மா குழந்தைக்கு சோறு ஊட்ற்றதுக்கேல்லாம் பேய்கிட்ட புடிச்சு குத்டிடுவேன்னு சொல்லுது....இவுங்கள புடிக்கறது தான் என் வேலையா....பரிச்சையில பெயில் ஆகறதுக்கெல்லாம் தூக்குல தொங்கிடரானுங்க... சாத்தான் இழுத்துட்டு போயிட்டான்னு என் பேர் அடிபடுது....

ச்சுமா புலம்பாதடா.. யாருக்குதான் கஷ்டம் இல்ல.. என் கஷ்டத்த நான் சொல்லட்டா...

என் பேரை சொல்லி பூஜைய போட்டு, ஆடு கோழின்னு வெளுத்து வாங்கிட்டு விடிச்சதுல இருந்து தூங்கற வரை அத குடு இத குடுன்னு நச்சிகிட்டே இருக்கானுங்க...நான் என்ன நகக் கடையா..... ஒரு அம்மா... பத்து பவுன் நகை குடு.. மொட்டை அடிக்கறேன்னு வேண்டுது.. முடிய வைச்சுகிட்டு நான் சவுரி வியாபாரமா பண்றது....

நீ கடவுள்.... கஷ்டப் பட வேண்டியது தான்... நான் எதுக்குயா... பைத்தியம் பிடிகறதுக்கெல்லாம் பேய் பிடிச்சிருக்குன்னு சொல்லி என்னை அசிங்கப் படுத்தரானுங்க...

அத அப்பிடி எடுத்துக்க கூடாது.. நம்ம மக்கள் என்னை விட உன்னதான் அதிகமா நம்பறாங்க... அது பெருமை தானே...

வீண் பெருமை வாழ்க்கைக்கு உதவுமா.... கடவுளே.... லவ் பெயிலியர்க்கும், பெத்தவங்க திட்ரதுக்கும், வாத்தியார் அடிகரதுக்கும், பொசுக்குன்னு உயிரை விட்டுட்டு சாத்தான் இழுத்துட்டு போயிட்டான்னு பேசறது எவ்ளோ முட்டாள் தனம்....

ஒரு சாத்தான், உனக்கு இருக்கற அறிவு... மனுசங்களுக்கு இல்ல பாரு....

யோவ்... பாத்தியா.. கடவுள் புத்திய காட்டிட்ட...சாத்தானா அவ்ளோ இளக்காரமா...! ஏன் சாத்தானுக்கு அறிவிருக்க கூடாதா....?

ஹே.. நான் அப்டி சொல்லல...

நான் இருக்கற வரை தான் உனக்கு மதிப்பு... நான் இல்லேன்னா.. உன்ன ஒரு பய மதிக்க மாட்டான்....ஞாபகம் வைச்சுக்கோ....

ஞாபகங்கள் தான் பிரச்சனையே... செத்ததுக்கு அப்புறமும் ஞாபகம் இருக்கும்னா சாகறதுக்கு நான் நீன்னு எல்லாரும் போட்டி போடுவானுங்க....

ச்சுமா தத்துவம் பேசிட்டே இருக்காத கடவுளே... தத்துவம் பசி போக்காது...

தத்துவம் பசை போக்கணும்னு அவசியம் இல்ல

ம்ம்.... நல்ல கணக்கு வாத்தியார் மாரி வாய் கிழிய பேசு...

ஆமா தம்பி... எல்லாமே கணக்கு தான்.... நீ பெருவெளில, பால்வீதில சுத்தற ஆள்தான.... ஸ்வட்டர் போடாம போயேன்...பாக்கலாம்....... சிலது காலத்தோட குளிரு... ஸ்வட்டர் போட்டுத்தான் ஆகணும்.. சிலது காலத்தோடு வெயிலு.... சட்டைய கழட்டித்தான் ஆகணும்.....

அப்போ காலத்துக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கறவன் தான் புத்திசாலி இல்லையா....

ஆமா... செத்துட்டமேன்னு அழுதுட்டு படுத்திருந்தா வேலைக்காகாது.... மரணத்துக்கு அப்புறம் இருக்கற சூனியத்துக்குள்ள ஒரு ஒளி இருக்கு.. அத தேடி ஓடியாகணும்... பிரபஞ்சமும் காலமும் தீரவே முடியாத தூரங்கள்... ஒவ்வொரு உயிருக்கும் அர்த்தமிருக்கு... அத புரிஞ்சுக்கறதுலதான் சூட்சுமம் இருக்கு....

நீ பேச பேச நல்லாத்தான் இருக்கு.... ஆனா கொஞ்ச நாளைக்கு நீ சாத்தானா இரு.... எனக்கு போர் அடிக்குது....

அட பாவி... நீ தாண்டா கடவுளாக இருக்க, போர்னு சாத்தான் பதவிய கேட்டு வாங்கின...

ம்ம்.. நீ பணம் குடுத்த.... அதா மாறினேன்..

பணம் குத்த மாறிடறதா...

பின்ன... பணம் இல்லாம நீ உச்ச கூட போக முடியாது அவ்ளோ கேட்டு கிடக்கு பூமி......

காதுக்குள் இருந்த பயம் வியர்வையாக வடிந்து கொண்டிருந்தது எனக்கு.... சிந்தா.... தள்ளாடியபடியே என் மீது சரிந்தது.... நான் சிந்தாவைத் தாங்கி பிடித்து பக்கத்தில் இருந்த சோபாவில் படுக்க வைத்தேன்...

பக்கத்து அறையில் இருந்த வந்த பேச்சு சத்தம் சட்டென அடங்கியது.... எனக்குள் எதோ உருகத் தொடங்கியது..... தலைக்குள் எதோ பாரம்.... சிந்தா கண்கள் பாதி மூடி மூடி என்னை அருகே அழைத்து கொண்டிருந்தது... நான் சிந்தாவை உற்றுப் பார்க்கத் தொடங்கினேன்...

தொலைக்காட்சியில்.......பாடல்....

தொட்டு விடதான் தொட்டுவிடதான் இந்த பட்டு உடல் பூ பூக்கும்.....

கவிஜி

* நியந்தாவா அது யாரு....

எழுதியவர் : கவிஜி (5-Sep-14, 8:56 pm)
பார்வை : 128

மேலே