நினைவும்,நினைவின் நிமித்தமும்

"அந்த ஏலியன்ஸ், நம்மல பயங்கரமா தாக்கிட்டு யிருக்கு, அத உடனேதடுத்தாகனும். இல்லைனா? நம்ம ஊருக்குள்ள வந்துரும்"
“என் கூட ஒரு டீம்வாங்க நாம அத சுத்தி போய் பின்னாடி இருந்து தாக்கு வோம்"
அப்போது என் கைபேசி அதிர்ந்தது, பார்த்தேன், அழைப்பது "ராட்ச்சசி" என்று காட்டியது. அப்படியே விட்டு விட்டு "ஏலியன் வேட்டை" யை பார்க்க துவங்கினேன்.
“நம்ம தாக்குதல்ல அதுங்க பின் வாங்க ஆரம்பித்து விட்டன, இப்படியே தொடர்ந்து தாக்குவோம்"

அடுத்து 5 நிமிடத்தில் மீண்டும் அவளிடம் இருந்து அழைப்பு, இம்முறையும் ஏற்க்கவில்லை. அரைமணி நேரத்தில் படம் முடிந்தது, தியேட்டர்விட்டு வெளியில் வந்து அருகில் இருக்கும் , டீ கடைக்கு சென்றேன். டீ குடித்து கொண்டே
கைபேசியை எடுத்து பார்க்கலானேன். ராட்ச்சசியின் தவறிய அழைப்புகளை
(நான் தவறவிட்ட அழைப்புகளை) காட்டியது. டயல் செய்தேன், உடனே எடுத்துவிட்டாள்,எடுத்துவுடன் அர்ச்சனைதான்
என்னடா போன் பன்ன எடுக்க மாட்டியா? அவளோ பிஸியா நீ? சரி போன எடுக்கல ஒரு மெஸேஜ் அனுபிருக்கலாமல?
போடா பேசாதா
அதான் இப்ப போன் பன்னிடேன்ல சொல்லு
சொல்ல முடியாது.
சரி, சீக்கிரம் சொல்லு வெய்ட் பண்றேன்.
உன்னெல்லாம் திருத்தவே முடியாதுட
சரி, என்னன்னு சொல்லுங்க மேடம்.
அப்பா போன் பண்ணியிருந்தாங்க இரண்டு நாள்ல என்ன பொண்ணு பாக்க வராங்களாம்
செம காமெடி அப்புறம்.
சிரிக்காதடா, அதனால நாளைக்கு நாம ஊருக்கு கிழம்புறோம்.
என்னது நாமலா??
ஆமா ரெண்டு டிக்கெட் ரிஸார்வ் பண்ணிட்டேன்,அதான் நீ வர்ரியா இல்லையான்னு கேட்க்கதான் போன் பண்ணேன்.
அதான் ரிஸர்வ் பண்ணியாச்சுல வர்ரேன்.
கஷ்டப்பட்டு யாரும் வர வேண்டாம்.
இம்ச, அதான் வர்ரேன்னு சொல்லிடேன்ல.
ம்ம்ம்ம்ம்ம்ம், குட் பாய், இப்ப எங்க இருக்க?
தியேட்டர் கிட்ட இருக்கிற டீ கடைல.
சரி நான் வர லேட்டாகும் , நைட், சாப்பாடு ரெடி பண்ணிரு.
சரிங்க மேடம்
சிரித்துவிட்டு போனை வைத்துவிட்டள்.
***
இவ்வளவு அடாவடியாக என்னிடம் பேசியது , என் உயிர் தோழி. இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தோம், ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் பேசிக் கொள்ளவே செய்தோம்.
நன்றாகவே படிப்பாள், அதனால் காம்பஸ் இண்டர்வியூவில் வேலையும் கிடைத்துவிட்டது.
இவளுடன் நட்பு ஏற்பட்டதே சுவாரஸ்யமான கதைதான். பார்த்தாள் கூட சிரிக்க மாட்டாள்(ஒரே கிலாஸ் தான் சிரித்தாள் என்ன? திமிர் பிடித்தவள் என்று நினைத்திருக்கிறேன்.)
சிலரை பார்த்தவுடன் பல நாள் பழகியது போல தோன்றும் அல்லவா இவளையும் அப்படித்தான் பிடிக்கும்.

பிரிதொரு நாளில் தற்ச்செயலாக அவளது ஃபோன் நம்பர் கிடைத்தது ஒரு விபத்தில்(அதை சொல்வதென்றால் ஒரு தனி கதையே எழுதலாம்)
எப்போதாவது லாப்-ல்(lab) வைத்து பேச சந்தர்ப்பம் கிடைக்கும், அது நட்பு பாலம் அமைக்க போதுமானதாக இல்லை. அந்நிலையில் அவளது ஃபோன் நம்பர் உதவியாக இருந்தது.

அவளது பிறந்த நாள் அன்று அவளுக்கு வாழ்த்துக்கள் அனுப்பினேன்.
(உலக யுவன் - யுவதிகளுக்கு முக்கியமான நாளில் தான் பிறந்திருந்தாள்)
அவள் எனது வாழ்த்துக்களை எதிர்பார்த்திருக்க மாட்டாள் என்று நினைத்தேன் அதே போல் அவளும் கேட்டாள்
என் பிறாந்த நாள் உனக்கு எப்படி தெரியும்? என்று
இன்று வரை நான் அவளைடம் அதற்கான பதிலை சொல்லவில்லை.
அதன் பின் அவ்வப்போது, போனில் பேசிக் கொள்வோம்
(நான் பேசியதை விட கேட்டது தான் அதிகமாக இருக்கும்) நிறைய சின்ன சின்ன சண்டைகள்.
நான் ஏதாவது ஆர்வமாக சொன்னால் பொறுமையாக கேட்ப்பாள். அது அவளுக்கு பிடிக்குமா இல்லையா என்று கூட நான் கேட்டது கிடையாது.

முக்கியமாக கல்லூரி முடிந்த சமயத்தில், இவளின் நட்பு எனது தனிமை போக்கியருக்கிறது. (இன்று வரை) நிறைய பேசியிருக்கறோம்.
( இப்படி நிறைய நினைவகள் என்னுள், நினைவுகளுக்கு சொந்தமானவள் இன்னும் சில தினங்களில் தூரம் போக் போகிறாள்.)
***
வீட்டிற்கு 8 மணிக்கு வந்தேன், குளித்து விட்டு இரவு உணவை தயார் செய்தேன், தோசை ஊற்றி சாப்பிட்டேன்
அவளுக்கு சூடாக சாப்பிடத்தான் பிடிக்கும் அதனால் அவள் வந்த பிறகு தயார் செய்து கொடுக்கலாம் என்று அவளுக்காக காத்திருந்தேன்.
எனது நினைவுகள் பின்னோக்கி செல்ல துவங்கியது காத்திருந்த சமயத்தில்.

இந்த ஃபிளாட் இருவரும் சேர்ந்து வாடகைக்கு இருக்கும் இடம். அவளுக்கு தான் இங்கு (ஹைதராபாத்தில்) வேலை கிடைத்தது.
நான் சும்மா ஊர் சுற்றி கொண்டிருந்தேன், அப்படியிருக்கையில் ஒரு நாள் அவள் போன் செய்தால்.
எப்படி இருக்க? ஒரு போன் இல்ல ? மெசேஜ் இல்ல?
(எந்த கேள்விக்கு பதில் சொல்ல என்று யோசித்தேன் அதற்குள் அடுத்த கேள்வி)
எதும் வேலை கிடச்சுட்டா?
(இதற்கே முதலில் பதில் சொல்லலாம்)
கிடச்சா உன்ட சொல்லாம இருப்பேனா?
சரி சரி , வீட்ல எல்லாரும் நல்லயிருக்காங்கலா??
ம்ம்ம்ம். எல்லாரும் நல்ல இருக்காங்க.
நீ ஊர்ல சும்மா இருக்கிறதுக்கு இங்க வந்து வேலை தேடு
அங்க வரவா? எங்க தங்க?
என் கூடத்தான், எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல தனியா ஃபிளாட் பாத்திருக்கேன். அங்க தான் தங்க போறேன் நீயும் வா.
நான் எப்படி??
உன்ன வர்றியான்னு கேட்க்கள வரச்சொன்னேன். அட்ரஸ் உனக்கு எஸ்.எம்.எஸ் பன்றேன்
ம்ம்ம். சரி.
அடுத்த இரண்டு நாளில் வீட்டில் சொல்லிவிட்டு ஹைதராபாத் சென்றேன். ஒரு வழியாக அட்ரஸை கண்டு பிடித்து போய்விட்டேன்.

நான் வருவதாக முன்னமே சொல்லியிருந்ததால் லீவ் போட்டிருந்தாள்.
நான் அங்கு சென்றதில் அவளுக்கு சந்தோஷம் என்பதை அவளது விழியும் பின்னர் குரலும் தெரிவித்தது..
குளித்துவிட்டு வந்தேன், இருவருக்கும் சேர்த்து பார்ப்பதற்க்கே சுமாராக ஏதோ ஒன்றை செய்து வைத்திருந்தாள். அதற்கு "உப்புமா" என்று பெயரும் வைத்திருந்தாள்.
எனக்கு அதை பார்த்ததும், சிரிப்புதான் வந்தது, அவளிடமே கேட்டேன் இதற்கு பெயர் என்ன என்று.
இது நிச்சயம் அவளை கோப படுத்தியிருக்க வேண்டும்.
இத நீ பாத்ததே இல்லையா?
ஆமா
போடா, உனக்கு போய் சாப்பாடு செஞ்சேன் பாரு ? என்ன சொல்லனும் நீ ஒன்னும் இத சாப்பிட வேண்டாம். ஹோட்டல் போய் சாப்பிட்டுக்கோ.

நானும் ஒரு வழியாக தப்பித்தேன் என்று ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு விட்டு வரும் போது அவளுக்கும் ஒரு பார்சல் வாங்கி வந்தேன்.
நான் நினைத்தது போல் , அந்த "உப்புமாவை" அவளால் கூட சாப்பிட முடியவில்லை போல அப்படியே இருந்தது.
நான் பார்சலை மேஜை மீது வைத்துவிட்டு " யாருக்காது பசித்தால் எடுத்துக்கலாம் " என்றேன்.
நான் சாப்பிட்டேன் நீ வாங்கிட்டு வந்தது வேஸ்ட் தான் என்றாள்.நான் உடை மாற்ற உள்ளே சென்றேன், வந்து பார்த்தாள் பார்சலை காணவில்லை.
அவள் சாப்பிடு கொண்டிருந்தாள்,
“எந்த ஹோட்டல்ல வாங்குன நலலாவே இல்லடா, இருந்தாலும் நீ வாங்கிட்டு வந்துட்ட அதனால சாப்பிடுறேன் " என்றாள். சிரித்துக் கொண்டே.
நானும் சிரித்த நொடி, காலிங்க் பெல் சப்தம் கேட்டது.
***

போய் கதவை திறந்தேன்,வேறு யார் வரப்போகிறார்கள், ராட்ச்சசி தான்.
என்னடா தூங்கிட்டியா?
இல்லையே..
சரி ரொம்ப பசிக்குது போய் சாப்பாடு எடுத்து வை என்றாள் அவளுக்கே உரிய பாவனையில் பாவமாக கேட்டாள்.
அச்சச்சோ, உனக்கு சாப்பாடு செய்யலையே
மறுகனமே என்னை அடித்துவிட்டாள், போன் பண்ணா எடுக்கிறது கிடையாது, சொன்னது எதையும் செய்றது கிடையாது. உன்னோட தொல்லையா போச்சுடா.
போ போய் ஹோட்டல்லயாது வாங்கிட்டு வா
நானா முடியவே முடியாது நீயே போய் வாங்கிட்டு வா
என்னடா ஆச்சு உனக்கு வர வர சரியில்லடா, யரையும் லவ் பண்ண ஆரம்பி்சுட்டியா, என்ன வீட்ட விட்டு கலிபண்ணத்தான் இப்படில்லாம் பண்றியா?
இம்ச, ரொம்ப பேசாத போய் ரிஃரஷ் ஆகிட்டு வா. தோசை ஊத்தி தர்றேன்
இத முதல்லையே சொல்லிருக்கலாம்ல, நான் பசியோட இவளோ பேசியிருக்க மாட்டேன்ல.
சும்மா உன்ட வம்பிலுக்கலைன்ன சரியா தூக்கம் வர மட்டைக்கு அதான்.
திமிருடா உனக்கு.

சாப்பிடும் போது கூட பேசிக்கொண்டுதான் இருந்தால்.
ஆபிஸ்-க்கு ஒரு வாரம் லீவ் சொல்லிட்டியா?
எதுக்கு ஒருவாரம்?
நாளைக்கு காலைல நாம எங்க ஊருக்கு கிளம்புரோம் போன்ல சொன்னேனல அதுக்குள்ள மறந்துட்டியா?
அதுக்கு எதுக்கு ஒருவாரம்? உன்ன வீட்டுல விட்டுட்டு நான் அடுத்த ரயில்ல கிளபிருவேன்.
விளையாடுறியா? நீ கண்டிப்பா அங்க இருந்தாகனும், வீட்டில எல்லம் சொல்லியாச்சு.
நீ ஒரு வாரம் அங்க தங்கனும் அவளோ தான் .
குட் நைட் போய் தூங்கு நாளைக்கு சீக்கிரம் கிளம்பனும்.
(நான் முடியாது என்றாலும் , விட மாட்டாள், பிடிவாதக்காரி வேறு வழியில்லை, ஒரு வாரம் அவள் ஊரில் இருந்தாக வேண்டும்).
***
காலை 5 மணிக்கே செல்போனின் சப்தம் கேட்டு கண் விழித்தேன், யாரென்று பார்த்தேன், இவள் தான் பக்கத்து அறையில் இருந்து கொண்டு.
பின்னாடியே இரு எஸ்.எம்.எஸ் வேறு. “சீக்கிரம் கிளம்பு 7.30க்கு முன்னாடி ஸ்டேஸன்ல இருக்கனும்"
இருவரும் கிளம்பி 7.15க்கே ஸ்டேஸனுக்கு சென்று விட்டோம். அதிசயமாக ரயில் சரியான நேரத்திற்கு வந்தது.
“நீ ஊரவிட்டு போகனும்னு ரயில் கூட சரியான நேரத்துக்கு வருது போல
”முறைப்பாள் என்று பார்த்தேன் அடித்தே விட்டாள்.
அடுத்த 15 நிமிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவள்.
இப்பவே பிராக்டிஷா, இன்னும் கொஞ்ச நாள்ல பேசாம இருக்கிறதுக்கு. இது நிச்சயம் அவளது கோபத்தை அதிக படுத்தியிருக்க வேண்டும்.
அவ்வளவு கோபமாக பார்த்தாள்.
“எல்லாம் தெருஞ்ச மாதிரி ஓவரா பேசாத , நான் உன்ட பேசமாட்டேன்னு சொன்னேனா, இல்லைல" அப்புறம் என்ன
நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்
எதுனாலும் விளையாட்டுக்கு பேசிருவியா? நான் பதில் சொல்லவில்லை , அமைதியாய்ருந்தேன்.
கொஞ்ச நேரம் கழுத்து, ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து நீட்டினாள்
எடுத்துக்கோ?
கோபமா கொடுத்தா வேண்டாம்.
ரொம்ப பண்ணாதடா, என்று பாக்கெட்டை என் கையில் தினித்தால். பின்பு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம், அவள் தூக்கம் வருகிறது என்று ஜன்னலில் சாய்ந்து தூங்கி விட்டாள்.
*****

அடுத்த ஸ்டேஷன் வந்தது, அழகா தூங்கி கொண்டிருக்கும் அவளை எழுப்ப மனம் வரவி்ல்லை அதனால், நான் மட்டும் தேனீர் வாங்கி குடிக்க ஆரம்பித்தேன்.
தேனீர் சில காலம் பின்னோக்கி இழுத்து சென்றது. ஒரு விடுமுறை நாளில் நான் அங்கு சென்ற புதிதில்(எனக்கு டீ ரொம்ப பிடிக்கும்). வம்படியாக நான் டீ போடுகிறேன் என்று சமையலறைக்கு சென்றாள்.
என்ன ஆச்சரியம், போன நான்கு நிமிடத்தில், ஒரு கோப்பையுடன் வந்தாள், முதலில் நீ டேஸ்ட் பாரு என்று நீட்டினாள்.
என்ன வச்சு டெஸ்ட் பண்றியோ?
போடா கஷ்டப்பட்டு டீ போட்டா கிண்டல் பண்ற
சரி குடிக்குறேன் , எதுக்கும் பக்கதுல இருக்கிற ஹாஸ்பிட்டல் போன் நம்பர எடுத்து வச்சுக்க.
நீ குடிக்கவே வேண்டாம்.
சரி சரி கோபப்படாத கொடு,
குடித்தேன் சுத்தாமா நல்லவேயில்லை, வெந்நீரில் தேயிலையை காலக்கியது போல இருந்தது.
எப்படியிருக்கு?
நல்லவேயில்ல, உனக்கு தான் வெந்நீர் போடவே தெரியாதே, இதேல்லாம் ஏன் முயற்சி பண்ற என்றேன் சிரித்துக்கொண்டே..
அவள் கோபமாகிவிட்டாள். உனக்கு போய் போட்டு கொடுத்தேன் பாரு என்ன சொல்லனும், நீ ஒன்னும் குடிக்க வேண்டாம் அப்படியே வச்சிரு
கோபபடாத சொன்னா கேளு,
யார் பேச்சையும் கேட்க்க வேண்டிய அவசியம் இப்ப எனக்கு இல்ல.
இன்னு அங்கே இருந்தால் சண்டை அதிகமாகத்தான் ஆகும். அதனால் வெளியில் கிளம்பினேன்.
எங்கே போய் சுற்றுவது, படத்தி்ற்கு போகலாம் என்று, அருகில் இருக்கு தியேட்டருக்கு சென்று டிக்கெட் எடுக்க கியூவில் நின்றேன்.
அப்போது அவளிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
“சாரி, என்னாலையும் அத குடிக்க முடியல, சிக்கிரம் வாந்து எனக்கு டீபோட்டு கொடு"
நான் சிரித்துக் கொண்டே கியூவை விட்டு வெளிவந்து வீடு வந்தேன்.
அருகில் இருந்த ஒருவரின் சைனா மொபைலின் சப்தம் என் தேனீர் நினைவுகளை கலைத்தது.
***
இப்போது அவள் தூக்கம் கலைந்து எழுந்திருந்தாள், எழுந்தவுடன் எனது செல்போனை எடுத்து வைத்துக்கொண்டாள்.
அப்போது ரயில் மற்றொரு ஸ்டேஷனை நெருங்கி இருந்தது, அங்கே உள்ள டி.வியில் எல்லாரும் கும்பலாக நின்று கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தார்கள்.
நான் அவளை அழைத்து காட்டினேன் பார்த்தியா இங்க எத்தனபேர் நிம்மதியா மேட்ச் பார்க்குறாங்க, ஆனா நான் இங்க வந்ததுல இருந்து ஒரு நாள் கூட நிம்மதியா மேட்ச் பார்க்கல என்றேன்.
சிரித்தாள்.. அந்த போராட்ட நிகழ்வுகளை நினைத்தபடி,
உலகத்திலேயே ஒரு டி.வி-க்கு ரெண்டு ரிமோட் வாங்கிபார்த்தது நாங்களாகத் தான் இருக்கும்.
அவளுக்கு சீரியல் என்றாள் அவ்வளவு பிடிக்கும், ஆபீஸ்ல வேலை இருந்து லேட்டா வந்தாலும் யூ.டியூபிலாது சீரியலை பார்த்தாக வேண்டும் இல்லை என்றாள் தூங்கமாட்டாள்.
இப்படி இருக்கும் போது, சிரியலும் மேட்ச்சும் ஒரே நேரத்தில் நாங்கள் பார்க்க நினைத்தால் எப்படி இருக்கும். ஒரே ஒரு ரிமோட் இருக்கும் போது செம சண்டை நடக்கும்.
நிறைய முறை அவளிடம் அடி வாங்கியிருக்கிறேன்.
யார் முதலில் ரிமோட்டை கைபற்றுகிறார்களோ அவர்களுக்கு தான் அன்று டி.வி பார்க்கும் உரிமை என்று ஒரு ரூல் வைத்திருந்தோம் அதை எல்லாம் அவள் மதித்ததே கிடையாது.
தான் பார்க்கும் நிகழ்ச்சியில் விளம்பரம் வந்தால் கூட மற்றவர் பார்க்கும் சேனலுக்கு மாற்ற மாட்டோம். இதற்காகத்தான் இரண்டு ரிமோட் இருந்தாலும் சண்டை குறைந்தபாடில்லை.
அவளை அறையை விட்டு வெளியில் அனுப்ப இரண்டு எளிய வழி முறைகள் உள்ளன.
1. அவளை கோபபடுத்திவிட்டால் போதுமானது.
2. ஏதாவாது பேய் படத்தை காட்டிவிட்டால் போதும் பயந்து போய் அவளோ போய்விடுவாள்.
அவளை இரண்டாவது முறையை பயன் படுத்திதான் பெரும்பாலும் மேட்ச் பார்த்திருக்கிறேன்.
அவளுக்கு பேய் என்றால் ரொம்ப பயம்.அதனால் ஒரு நாள் முகமூடி அணிந்து அவளை பயமுறுத்திவிட்டேன்.
அதில் அவளுக்கு காய்ச்சலே வந்துவிட்டது, அன்றிலிருந்து அவளை பயமுறுத்து வதை விட்டு விட்டேன்.
****
இப்போது இவளை பார்த்தது எனக்கு சிரிப்பு தான் வந்தது வளர்ந்த குழந்தை இவள். மீண்டும் நினைவுகள்.
ஒரு நாள் வீட்டில் இரவு டி.வி பார்த்தபடியே இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் கேட்டேன்.
எத்தனை நாளைக்கு தான் நம்ம இப்படியே சேர்ந்திருக்க முடியும்.
எதுக்கு இந்த கேள்வி இப்ப, எப்பவும் இருக்கலாமே, நீயும் நானும் யாரையாது கால்யாணம் பண்ணுவோம்ல.
ரெண்டு ஃபேமிலியும் ஒரே வீட்டில் இருப்போம்.
அதெப்படி முடியும் அதெல்லாம் கஷ்டம், நம்மல கல்யாணம் பண்ணிக்கிறவங்க நம்மல புருஞ்சுகினும் அப்பதான் இதெல்லாம் முடியும்.
அதனால என்ன சொல்லவர்ற?
நான் ஒன்னும் சொல்ல வரல, உன்ட கேட்டேன் அவளோதான்.
சரி, ஒரே வீட்டில் வேண்டாம் பக்கத்து பக்கது வீட்டில் இருப்போம். அப்புறம் யாருக்கு முதல்ல கல்யாணம் ஆகுதோ அவங்களுக்கு இந்த ஃபிளாட் மத்தவங்க வேர வீடு பாத்துக்கனும் என்று சொல்லி முடித்தாள்.ம்ம்ம், சரிங்க மேடம்.
ஒரு ஹெல்ப் , உன்னோட ஃபிரண்ட்ஸ் லிஸ்ட்ல அழகான பொண்ணுங்க யாராது இருக்காங்களா?
ம்ம்ம், இருக்காங்க ஏன் கேட்குற?
ஒன்னுமில்ல, அழகான பொண்ணா பாத்து எனக்கு இண்ட்ரோ கொடு, அப்புறம் அப்படியே உனக்கு ஒரு வீட்டையும் பார்கக ஆரம்பிச்சுரு சரியா?
கொழுப்பு கூடிட்டுடா உனக்கு ?
அப்புறாம் ஒரு கண்டிஷன், அந்த பொண்ணு தமிழ் பொண்ணா இருக்கனும்.
வேற?
அவளோதான், நீ சீக்கிரம் இண்ட்ரோ கொடு.
சொல்லி முடிக்கும் முன்னமே கையில் இருந்த ரிமோட்டை என் மீது எரிந்துவிட்டாள்.
என் முகத்தி்ல் மட்டும் மழை பொழிந்தது, சில்லென்றா தண்ணீரை துடைத்து கொண்டே கண்விழித்தேன், எதிரில் அவள்
என்ன சார், ட்ரீம்ஸா என்றாள், கையில் தண்னீர் பாட்டிலுடன்.
(இல்ல மெமரீஸ் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்)
நீ எப்போ முழுச்ச என்றேன்.
ரொம்ப நேரம் ஆச்சு, நீயா முழிப்பபன்னு வெயிட் பண்ணேன் லேட் ஆகிட்டு அதான் தண்ணிய ஊத்திட்டேன், என்று கண் சிமிட்டினாள்.
****

இருவரும் பார்சல் சாப்பாடை சாப்பிட்டோம், சாப்பிடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம், பின்பு தூக்கம் வருது என்று அவள் படுத்துவிட்டாள்.
நான் நினைவிற்க்கும் , கனவிற்கும் நடுவில் பயனித்து கொண்டிருந்தேன்.
அப்போது, “மதுரைக்கு என்னும் ஒன்றரை மணி நேரத்தில் போய்விடலாம்" என்று பக்கத்து சீட்டில் இருவர் பேசிக் கொண்டிருந்தானர்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில், இவள் என்னை பிரிய போகிறாள். எனக்கு இவளுக்குமான் நெருக்கம் உடைந்து, தூரம் அதிகரிக்க போகிறது.”
“இவளுக்கு வாக்களித்தது போல் என்னால் இங்கு ஒரு வாரம் என்ன ஒரு நாள் கூட இருக்க முடியாது.”
“பிரிவை எனது மனம் ஏற்றுகொள்ளா மறுக்கிறது ஆனால் இதுதான் நியதி.”
"இதை என்னால் அவளிடம் விளக்கி சொல்லவும் முடியாது"

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அவள் நல்ல தூக்கத்தில் இருந்தால் அவளது கைபை-யை மெதுவாக எடுத்து, எனது செல்போனை எடுத்து ஹைதராபத்தில் இருக்கும் எனது நண்பனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு மீண்டும் பையை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் ரயில் மதுரை ஸ்டேஷனில் நின்றது. நாங்க ரெண்டு பேரும் இறங்கி, பிளாட்பாரத்தில் நடந்து, வெளியில் வந்தோம், அவளது அப்பா எங்களை அழைத்து செல்ல அவரது ஸ்விஃப்ட் காரில் வந்திருந்தார்.
“வாங்க தம்பி " என்றார். நானும் பதில் வணக்கம் போட்டேன்.
எனது மனம் படபடத்து கொண்டிருந்தது.
“என்னடா இன்னும் போன் வரவில்லையே என்று".

நான் கார் கதவை தொட்ட நொடி, அவளது கைபையில் இருந்த எனது செல்போன் ஒலித்தது.
அவளே எடுத்து பேசினால்,பேசி முடித்து சோகமாக என்னிடம் கொடுத்தாள்.
(நான் எனது நண்பனுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்-யில் இருந்த விசயம். இதுதான் "என் லீவ் கேன்சல் ஆகிவிட்டதாக சொல்லி, உடனே என்னை வேலைக்கு அழைக்க வேண்டும் என்பதே")
நான் சொன்னதை சரியாக செய்துவிட்டான்.
அவள் வருத்தத்துடன் என்னை வழி அனுப்பிவைத்தாள். எனக்கு வருத்தம் தான் ஆனாலும் இது கட்டாயம்.
அவளது அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டு, மீண்டும் ரயில் ஏற உள்ளே சென்றேன்.
ரயிலிலும் ஏறிவிட்டேன், நான் செய்ய வேண்டிய வற்றை எனது மனம் பட்டியலிட துவங்கியது.
“நாங்கள் முன்பு பேசிக்கொண்டது போல் எனக்கு தனியே வீடு பார்க்க துவங்க வேண்டும்"
“அவளின் பிரிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்"
“மீண்டும் தனிமமையை பழகிக்கொள்ள வேண்டும்" முக்கியமாக
“இனி யாருக்ககும் மனதில் இவ்வளவு இடம் தரக்கூடாது".
எப்படி இதேல்லாம் முடியும், எங்கே டீ குடித்தாலும், எங்கே முகமூடிக்களை பார்த்தாலும், எங்கே சுமாரான உப்புமா சாப்பிட்டாலும், எப்போது கிரிக்கெட் பார்த்தாலும், எப்போதாவது ரயிலில் பயணம் செய்தாலும் அவளின் நியாபகம் வரத்தானே செய்யும்.
இப்படி இருக்கையில் அவளது பிரிவை எப்படி சமாளிக்க போகிறேன் என்று யோசித்த படியே ஹைதராபாத்தை வந்தடைந்துவிட்டேன்.

எழுதியவர் : சூரியா (6-Sep-14, 12:47 am)
பார்வை : 351

மேலே