கொண்டாடு.......

நாளொரு துயரம்
நமைவந்து சேரும்
தளர்ந்திடக் கூடாது
தம்பி! தாழ்ந்திடக் கூடாது !

என்ன நேரினும்
எதிர்த்திட வேணும்
குன்றிடக் கூடாது
தம்பி!கொள்கையை விடாது!

இன்பமும் துன்பமும்
இரவும் பகலும்
இயற்க்கை உணர்ந் தி டனும்
தம்பி! இயல்பாயிருக்கணும் !

துணிவுடன் எதையும்
தோளினில் ஏற்று
துயர் களைந்திடனும்
தம்பி!சோம்பல் பழித்திடனும் !

நாளொரு பாடம்
நாம் உணரனும்
நடுங்கிடக் கூடாது
தம்பி! நாளை வசமாகனும்!

துணிந்திடு துச்சம்
துவள்வது அச்சம்
புரிந்தே பழகிடு
தம்பி! புவியிதை கொண்டாடு!

எழுதியவர் : iniyavan (24-Mar-11, 10:01 am)
சேர்த்தது : iniyavan
பார்வை : 528

மேலே