+ஒரு மழை நாளில் துளித்துளியாய் நனையலாமா+
பெருமழைக்கு நடுவில்
என் சிறு குறட்டைச்சத்தம்
காணாமல் போனது!
நனைந்து நடந்து செல்லும் சில ஆடவரை
கண்ணடித்து கண்ணடித்து கேலி செய்தபடி
மின்னல் தோழி!
அம்மா மழைல நனஞ்சு நனஞ்சு விளையாடலாமா?
கேட்கும் மழலையை முறைத்துப்பார்க்கும்
பாசக்காரத் தாய்!
அனைவரும் மகிழ்ந்திருக்க
நடைபாதைக்கடையினர் மட்டும் பயத்துடன்
எப்போது நிற்குமோ?
எந்த அணை திறக்கப்பட்டதோ
ஊரையெல்லாம் பயமுறுத்திவிட்டுத்தான் ஓய்வெடுத்தது
இந்த மழை!
இப்போது நிற்குமோ அப்போது நிற்குமோ
என சாலையில் ஒதுங்கி நிற்போருடன் விளையாடுவதில் தான் மழைக்கு
எவ்வளவு ஆசை!