அவர்கள்
அவளும் படித்தாள்
அவனும் படித்தான்
அவள் வேலைக்குச் சென்றாள்
அவனும் சென்றான்
எங்கோ ஏற்பட்ட இரசாயன குழப்பத்தில்
இருவர் மனமும் ஒன்றென லயித்தன
சுரி குழல் என்றான்
மலர் முகிழென மலர்ந்தான்
இலக்கிய காதல் இதுவென
இலக்கணம் படித்தே திளைத்தான்
உலகே இவளென உலகினை மறந்தான்
விடுமுறை நாட்கள் முடியலை வெறுத்தான்
அம்பானி மித்தல் கல்லா கட்ட
எப்போது கைப்பேசியே கதியாய் கிடந்தனர்
குடும்பஙகள் இரண்டும் சேர்த்தது இவர்களை
குடும்பி களாயினர் ஈருயிர் ஓரில்
வேளை மாறி வேலைக்கு சென்றனர்
இரவும் பகலும் சந்திப்பது போல்
தினமும் ஓர்கணம் முகம் பார்த்தனர்
வார முடிவில் அவன் வாடாமல்லி
வாடித் தான் போயிருந்தது
நில்லா இச் சுழற்சியில் இவர்கள்
நல்லாத் தான் மாட்டிக் கொண்டனர்
நேரம் எதற்கும் இல்லாத போழ்து
சோறும் குழம்பும் வெளியில் தானே
ஊரிலுள்ள உண்டிச் சாலைகள் எல்லாம்
பாரில் இவர் போன்றோர்க்குப் பரிந்துதவவே
மோகம் ஆசை முழுதும் கரைந்தபின்
காரும் வீடும் கடனில் வந்தபின்
அம்மணி விட்டு வேலைக்குச் சென்றால்
அய்யா வுக்கு ஏனெரி கிறது
கூப்பிட்ட குரலுக்கு ஆளும் வேணும்
குடும்பக் கடனுக்குத் துட்டும் வேணும்
அருகிலேயே அவளும் வேண்டு மெனில்
ஆசைகள் சில குறைத்தால் என்ன
லக ரங்களில் பணம் புழங்கையில்
சகல வசதிகள் சுற்றி யிருக்கையில்
அடுப்பில் மட்டும் பூனை தூங்கினால்
அழகாய் விளங்குமோ வீடு
முமு