புகை என்னும் பகை

( இது முகநூலில் கவிதைச் சங்கமத்தின் வாராந்திரக் கவிதைக் கூடலுக்காக
""புகை என்னும் பகை"" என்ற தலைப்பில் இன்று( 08-sep -2014) எழுதப்பட்ட படைப்பு)


..................புகை என்னும் பகை......................


புகை என்னும் பகை - அதை
சொன்னால் இளைஞர்களிடம்
பிறக்கும் பார் ஓர் நகை..!

புகையிலை எனும் பொருள் போட்டு - உன்
வாழ்கைக்கே வைப்பார்கள் பெரும் வேட்டு
அதை அறிந்தும் தினம் நீ கேட்டு
பிணியை வாங்கிடுவாய் உன் நிதி போட்டு..!

உள்ளே சென்ற புகை அல்ல
வெளியே வரும் புகை - அது
உயிரை தரும் நுரையீரலின்
உயிரை எரிக்கும் புகை..!

வெள்ளை வடிவில் வந்திடுவான்..!
வினையை தந்து சென்றுடுவான்..!
உனக்கு மட்டும் வினையல்ல
உடனிருப்போருக்கும் அது வினையே..!

உணர்ந்திடு நண்பா நீ உணர்ந்திடு
உலகிற்கு நீ தேவையன உணர்ந்திடு..!

விரட்டிடு நண்பா நீ விரட்டிடு
விரல் தரும் வினையை நீ விரட்டிடு..!

உள்ளம் புகையினை மீண்டும் நாடினால்
உலர்திராட்சைதனை தினம் நீ நாடிடு..!

பிஞ்சு நெஞ்சினில் நஞ்சினை விதைக்காமல்
நெஞ்சினில் நஞ்சினை புகைக்காமல்
வாழும் வாழ்க்கையை தொலைக்காமல்
தாய்தந்தையின் நிம்மதி கலைக்காமல்
நண்பனையும் சேர்த்து கெடுக்காமல்
இவ்வுலகம் தூற்றிட வாழாமல் - நண்பா
வையுலகம் போற்றிட வாழ்ந்திடு - இவ்
வையுலகம் போற்றிட வாழ்ந்திடு..!

- ச.ஷர்மா

எழுதியவர் : ச.ஷர்மா (8-Sep-14, 2:32 pm)
Tanglish : pukai ennum pakai
பார்வை : 581

மேலே