புகை எனும் பகை

#### புகை என்னும் பகை #####
ஆறாம் விரலாய் பழகிய ஒன்று
ஆறடிக்கு உரமாய் மாற்றிடும் ஒன்று
ஆசை கொண்டு பழகிய ஒன்று
ஆளை கொன்று மறையும் ஒன்று
பிடித்து பிடித்து ரசிக்கும் ஒன்று
பிடித்த உன்னை ருசிக்கும் ஒன்று
படித்து படித்து சொல்லினும் கூட
பிடித்திட விடுத்து செல்ல
மறுத்திடும் ஒன்று
காலன் கொண்ட தோழன் அதுவே
கல்லறை சேர்க்கும் வேடன் அதுவே
சில்லரை கொடுத்து வாங்கும் அதுவே
செல்லறை கெடுத்து உயர் வாங்கும்
மெதுவே
பகையை கையில் எடுத்துக் கொண்டு
புகையாய் ஏற்றிடும் மானுடமே
சதைகள் எல்லாம் இழக்கும் முன்பே
சகடையை தூக்கி எறிந்திடுமே......