கானல் நாயகன்
அதி,காலையில் பூக்கும் பூவை போல
கல்லூரியில் பூத்தது எங்கள் இருவரின் நட்பு
ஒரே கல்லூரி
ஒரே துறை
ஒரே வகுப்பு
இரயில் வண்டியின் பெட்டிகளை போல
பிரிவின்றி தொடர்ந்தது
இனிப்பான தேனை போல
மிகவும் இனிமையாய் இருந்தது
பிரிவின் போதுவரும் கண்ணீர் துளியும்
இயற்கை தரும் மழைத்துளி போல்
சில்லென்று குளிர்ந்தது
சின்ன சின்ன சண்டைகளும்
சிரித்து மகிழ்ந்த நினைவுகளும்
சிறகடித்து பறந்த நாட்களும்
எங்கள் மனதின் மடியில் நியாபகமாய் அமர்ந்தது
கண்ணிமைக்கும் நேரத்தில் ,
காலங்களும் கடந்தது
-
-
-
-
தேர்வுகள் தொடங்கியது
எங்கள் தேடல்களும் நிறைவுக்கு வந்தது !
அந்தி மாலையில் மறையும் சூரியனின்
ஒளியை போல ,எங்கள்
ஆனந்தமான சிரிப்பில் அலைகள் அடிக்க தொடங்கியது
காணமல் போன கண்ணீருக்கு விடைகொடுக்கும் நேரமும் வந்தது
கண்கள் தேடியது
என் கண்ணீர் துடைத்த கரங்களை ??
திடீரென்று காற்றடிக்க
என் புத்தகத்தின் பக்கங்கள் படபட வென்று பறந்தது
அதிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது
அப்போதுதான் தெரிந்தது
எனக்கு கை கொடுத்த கரம் கானல் நீராய் மறைந்தது !!!!
நட்பின் வலியோடு .........
என் வாழ்கை பாதை தெரியும்போது
நான் வாழ்ந்தபாதை
ஒரு கற்பனை போல் இருந்தது..
(dedicated to all my friends.)