உளி - நாகூர் கவி

பாறையோடு கொஞ்சும்
பழகிய சிற்பியிடம்
பலமுறை ஓய்வு கேட்டு கெஞ்சும்...!

இதன் இதழ்களால்
முத்தங்கள் கொடுத்தே
கடினமானப் பாறைக்குள்ளும்
காதலைப்போல் நுழையும்...!

எத்தனை முத்தப் பரிமாற்றங்கள்
உனக்கும் பாறைக்கும்...?
உனது எஜமான் சிற்பியின்
விரல்களின் துணைக்கொண்டு.....!

அத்தனையும் இச் இச்
கேட்கும் செவிகளுக்கு நச் நச்...
உனக்கும் பாறைக்கும்தானே
அந்த அந்தரங்க டச் டச்...?

உயரத்தில் நீ
சிறுசுதான்...
உயரமான கற்களைப் பெயர்த்தெடுப்பதில்
உளியே நீ பெருசுதான்...!

எப்பொழுதும்
எப்போதும்...
நீ கலைக்கு
உயர்ந்த பரிசுதான்....!

கலையென்றால்
உன் சேவை மிகுதிதான்...
அதேவேளையில் காண்பதற்கு
கவர்ச்சி பகுதிதான்....!

சிற்பியின் இடுப்போடு
பொன்னாடைப் போற்றி உறங்கிடுவாய்...
சிற்பியின் விரல்தொட்ட மறுகணமே
உன்னாடை களைந்து களத்தில் இறங்கிடுவாய்....!

எழுதியவர் : நாகூர் கவி (8-Sep-14, 11:19 pm)
பார்வை : 409

மேலே