+எப்போது வாழுவான் எங்கள் விவசாயி+

தலைப்பாக் கட்ட‌ போட்டுக்கத்தான் உனக்குத் தெரியுமா
வேட்டியத்தான் இடுப்பில் கட்டும் முறையும் தெரியுமா
ஏறுபூட்டி வயல உழுக ஏதும் அறியுமா
வரப்புமேல நடந்து பாட்ட பாடத் தெரியுமா

நாத்து நட்டு நாலு வியர்வை சிந்தியதுண்டா
வெளஞ்ச பயிற பார்த்து மகிழ்ச்சி கொண்டதுவுண்டா
ஆடு மாடு கூட சந்தோசமா பேசியதுண்டோ
சம்மாட்டுல வர்ற கஞ்சிய பகிர்ந்து உண்டதுமுண்டா

என்னத்தத்தான் வாழ்ந்து புட்டோம் எனக்குத் தெரியிலே
விவசாயத்தை தொலச்சுப் புட்டோம் திருந்த வழியில்லே
விவசாயியின் கஷ்டத்த தான் போக்க முடியல‌
கவிதையில சொல்லி அத மாற்ற முறையில்லே

தீர்ப்பெழுதும் சாமிக் கிட்டே சொல்லிப் பாருங்க‌
தினம்தினமும் கண்ணீர் மட்டும் விரையம் ஏனுங்க‌
தேசம் பூரா அடிமட்டத்தில் விவசாயி கூட்டம்
நேசம்காட்டி விவசாயம் காப்போம் பாடுங்க பாட்டும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Sep-14, 6:41 am)
பார்வை : 976

மேலே