சின்ன கொசு
வரதே என்ற போதும் - என்
காதினில் வந்து முனுமுனுக்கின்றாய்.
உனக்கென்று வலைகள் அமைத்தலும் - நீ
துலைஇட்டு வந்து இசைக்கிறாய்.
உன் ராகத்திற்கு முன்னால் - பல
சப்தசுரங்களும் தோற்று விடும்.
பல் வரிசை இல்லை என்றாலும் - உன்
ஊசி முனையால் உசுப்புகிறாய்.
காற்றிலே உளாவி திரிந்து -நீ
என்னை எப்படி தீண்டினாலும்
உன்னை அழித்திட எனக்கு -மனம்
இல்லையே சின்ன கொசுவே!