பாரதீ

பாரதி(தீ ) ........
இந்த ஒற்றைத் தீக்குச்சிதான்
எத்தனை வேகமாக பொசுக்கி எரித்தது
அச்சமெனும் அடர்ந்தகாட்டை.......


சுதந்திரம், விடுதலை வேண்டுமென
வீர ராகம் வாசிக்க ஆரம்பித்தாய்

ஒடுங்கிப்போனது உருப்படாதவர்களின்
சப்த நாடியும்
ஒற்றை நொடிமுள்ளாய்....

காலன் திட்டமிட்டு தொலைத்தாலும்
தீர்ந்து போகாத நீர்த்தும் போகாத
நிஜக்கனல் நீ .........

வாள் எடுப்பவனுக்கு வீரம் வந்துவிடுவதுபோல
உன் பெயர்கொடுத்தவுடனே
காதல் வந்துவிடுகிறது
கவிதைகளுக்கு ........

கடந்த காலத்தில் இருந்த உன்னை
நிகழ் , எதிர்காலத்தை கடக்கையிலும்
நினைக்கச் செய்கிறது
உன்மீதான காதல்........

எங்கள் பாரதிக்காக...........


கவிதாயினி நிலாபாரதி .....

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (11-Sep-14, 1:32 pm)
பார்வை : 85

மேலே