பாரதி போற்றுதும் பாரதி போற்றுதும்

நீ
எல்லோர் மனதிலும்
பதிந்திருக்கிறாயா ?
இந்த வினா
இன்னும் அறியபடாத அறிவியலாய்....
பெயராய்
எல்லோரிலும் இணைந்திருக்கிறாய்
பெயருக்காகாவேனும்.........
முதன்முதலாய் கவிதைகள் உன்னை
காதலிக்க தொடங்கின
முழுமனதாய் .........
நீ நடந்து வரும் தைரியத்தில்தான்
பாதைகள் பரந்துவிரிந்தன
பாமரருக்கும் பஞ்சமருக்கும் ....
உன் துணிவு துணை வந்தது
எக்குலப் பெண்களுக்கும்
அடிமைச் சங்கிலியை அறுத்து எறிந்தாய்
அனல் கொண்ட வார்த்தை அரத்தால்
காதலையும் கற்பையும்
கண்களாக பாவித்தாய்
முழுஇன்பத்திலும்
முதல் இன்பம் காதல் என்றாய் ....
அமாவாசை பொழுதுகளில் ஏற்றிய
ஆகாய வெளிச்சமாய்
மின்னல் பார்வைகளின் மின்சாரம் நீ
அவனியின் ஆற்றுப்பாதையை
மாற்றியமைத்த
மழைவெள்ள கவிதை நீ ....
உன்னை போற்றுவதற்கும்
பற்றுவதற்கும் பாதை வகுத்த
பாட்டறிவு பண்டிதன் நீ.........
பெயருக்காக வாழ்வோர் மத்தியில்
பெயரோடு வாழ்கிறாய் பெயரில் இணைந்தபடி
அடிமைத்தனம் தீருமட்டும் தீராது உன் தீ வேட்கை
தீரும் நாளில் நாங்கள் வாழ்வோம் உன்போல
பார் போற்றும் பாரதியாய்........
பாரதி(தீ) யே நீ வாழ்க.........
கவிதாயினி நிலாபாரதி