ஒரு கல் நன்றி சொல்கிறது
உளி பிடித்தாய், ஓங்கி அடித்தாய்
உருவம் கொடுக்க, செதுக்கினாய், சிலையாக்கினாய்
கல்லாய் இருந்த நான், கடவுளானேன்
உன் கை பட்டதால், உருவமானேன்
ஆலயம் சென்றேன், அடைக்கலம் புகுந்தேன்
தினந்தோறும் குளிக்கிறேன், திடமாக இருக்கிறேன்
ஆடை அணிகிறேன், அலங்கரிக்கபடுகிறேன்
வண்ண, வண்ண மலர்களால், மாலை சூட்டி, வணங்கப்படுகிறேன்
நீ கொடுத்த வாழ்விற்கு, நன்றி சொல்ல நினைக்கிறேன்,
உன் பெயரை, என் மேல் பொறித்து விடு