கல்லறைகள் உயிர் பெறுகின்றன

இப்போது நான் சென்று வருகின்றேன்
நான் யாவற்றிலுமிருந்து மீண்டு வரும்போது
நீங்கள் உயிர் பெற்று எழு வீர்கள் என்பது
எனக்கு நன்றாகத் தெரியும்
கல்லறையில் வாழும் எனது இனிய
சொந்தங்களே!!! - உங்களை நினைத்து
உருகும் மெழுகு வர்த்தியாய் எனது
உள்ளம் அனலில் இட்டது போல இருக்கின்றது
எனது குருவும் இதே போல தான் சொன்னார்
இருந்தும் மனக் கவலை தீரவில்லை
என்பது தான் என் கவலை - என்னை நீங்கள்
தாம்பூலம் இட்டு வரவேற்க வேண்டாம்
செந் கம்பளம் இட்டு வரவேற்க வேண்டாம்
உங்கள் ஒரு சொட்டு கண்ணீருடன் வரவேற்றாள்
மட்டும் போதுமானது - அதுவே எனக்கு போதுமானது
நான் சுருசுருப்பானவள் மிக அழகானவள்
என் மனது உங்களுக்கு மட்டுமே புரியும்.
பாம்பின்கால் பாம்பு தான் அறியும்.
வேறொருவரும் அறிய மாட்டார்கள்.
இப்படிக்கு,
நான் ரீங்கரத் தேனீ

எழுதியவர் : புரந்தர (11-Sep-14, 6:42 pm)
பார்வை : 72

மேலே