வரிசையில் நிற்போம் வறுமையொழிக்க

​ஒருவேளை சோற்றுக்கு வழியின்றி
ஒருகுவளை நீருக்கும் தவித்திடும்
ஒருமழலையின் காட்சிதனை பாரீர் !

ஒருசொட்டு நீரும் நிலையில்லை
ஒட்டுத் துணிக்கும் வழியில்லை
ஒட்டிய வயிறே காலமெல்லாம் !

வறுமையின் வடிவத்தின் படிவமா
வறுமைக் கோட்டிற்கு எல்லையா
வறுமை வரைந்திட்ட புகைப்படமா !

வளைந்திடும் வறுமை இதுதானா
வறுமைக்கே வறுமை வந்திடுமா
வறுமைக்கு முடிவும் வாராதா !

வரிசையில் நிற்போம் வறுமையொழிக்க
வரிந்து கட்டிடுவோம் வறுமையொழிய
வற்றிய வயிறுகளுக்கு அன்னமிடுவோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Sep-14, 8:09 am)
பார்வை : 282

மேலே