முடியலையாஓடிடுதப்பே இல்ல-வித்யா
முடியலையா.ஓடிடு.......தப்பே இல்ல.....!!-வித்யா
வாழ்வில்
தைரியமாக முதல் அடி
எடுத்துவைக்கும் போது
சுற்றத்தைப்பார்........!
ஓரடி எடுத்துவைத்தப் பின்பு
நீ தோல்வியைத்தழுவியது
அறிவாயேயானால்......
எவ்வளவு வேகமா முடியுமோ
அவ்வளவு விரைவாக
திரும்பிப்பார்க்காமல் ஓடிவிடு......!!
மீண்டும் அதனினும்
அதிகத்துணிச்சளுடன்
அதேப் புள்ளியில் இருந்து
அடியெடுத்துவைக்க ஆரம்பிக்கலாம்......!
கண்ணாடி உடையும் முன்பே
பத்திரப்படுத்த வேண்டும்........!!