என் வாழ்க்கைப்பக்கம்வெற்றுக்காகிதம்-வித்யா

என் வாழ்க்கைப்பக்கம்(வெற்றுக்காகிதம்)-வித்யா

என் வாழ்க்கை
ஒரு வெற்றுக்காகிதம்..!
அதில் நான் எதுவும்
எழுதியதே இல்லை
எழுதவும் முடிந்ததில்லை......!!

இல்லை இல்லை எழுதும் அளவிற்கு
நான் வரவில்லை என்பதே உண்மை...!!

என்ன எழுதலாம்...?
என் இலட்சியங்கள்......பற்றி....
என் வெற்றித்தோல்விகள்......
என் உறவின்முறைகள்.....
என் பிரபலம் பற்றி.......
என் அனுபவங்கள்.......

வெறுமையாகவே விட்டுவிடவா..?

அய்யய்யோ...அப்படியாகின்
என் கைகளில்
வெற்றுக்காகிதத்தொடு
வந்த நான் போகும் போதும்
வெறுமையாகவே தூக்கிச்செல்ல வேண்டுமா.?
என் வாழ்வில் எதுவுமே நடக்கவில்லையா.?

நிச்சமாக இல்லை.....
ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான்
ஒவ்வொரு உயிரும் ஜனிக்கிறது........!!

கடவுளே.....
என் வாழ்வில் இப்போது நான்
எங்கு நின்று கொண்டிருக்கிறேன்
என்பது எனக்குத்தெரியாது......!!

அல்லது....
தெரியுமா என்பதும் தெரியாது..!!


ஆதலால்......
என் காகிதத்தில்
நான் பிறந்ததற்கான காரணம்
நிறைவடைந்தாவென்று தெரியாமலே
அழகான இப்புவியில் எனை படைத்ததற்கு
நன்றியைக் கூறிக்கொள்கிறேன்........!










-நானும் பக்கத்தை நிரப்பிட்டேன்.....!!

எழுதியவர் : வித்யா (12-Sep-14, 1:56 am)
பார்வை : 151

மேலே