நினைவில் சிரிக்காதே - இராஜ்குமார்

நினைவில் சிரிக்காதே
=======================

தேனை தீர்த்த வண்டும்
நெஞ்சை கிழித்த நீயும்
பறந்து சென்றும்
பாரமானது ஏன் ?

அழுது கொண்டே சிரிப்பதற்கு - உனை
மறந்து கொண்டே
இறப்பது எளிமை

ஆனாலும் கொடுமை
நினைவின் பிரிவால் .....

குண்டூசியில் துளைத்தாய்
மகிழாத மனதை
நடுநிசியில் வதைத்தாய்
நகராத நினைவை

இனி
நிலவில் நிற்காதே - என்
கண்கள் களவாடிவிடும்
நினைவில் சிரிக்காதே - என்
உலகம் மறந்துவிடும்

- இராஜ்குமார்

நாள் : 21 - 5 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Sep-14, 11:58 pm)
பார்வை : 91

மேலே