கம்பனும் கண்ணதாசனும்

செய்ய வாய் விளர்ப்பக் கண் சிவப்பு உற
மெய் அராகம் அழியத் துகில் நெகத்
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை காதல் கொழுநரும் போன்றதே---கம்பர்.

சிவந்த வாய்கள் வெளுக்க, கண்கள் சிவக்க, ஆடைகள் தளர்ந்து போக, உடலில் பூசிய சந்தனம் கரைந்து போக மங்கை தோய்வதற்கு இடமாக இருப்பதால் அந்த பொய்கையும் காதல் கணவணைப் போன்றது என்கிறார் கம்பர்.

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் என்ற பாடலில்...
வாயின் சிவப்பு விழியிலே,
மலர்களின் வெளுப்பு இதழிலே என்று பாடினார் கவியரசர்

எழுதியவர் : சுடரோன் (13-Sep-14, 7:50 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 345

மேலே