மலர்கள் உதிரும் மலரும்
வாடிய மலர்கள்
உதிர்ந்து
மண்ணில் சிதறிக்
கிடக்கின்றன !
புதிய மொட்டுக்கள்
முகிழ்த்து
முகம் மலர்ந்து
வசந்தத்தை
வரவேற்கின்றன !
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
மலர்களின் வழக்கம் !
இது இளவேனில் தென்றல்
சொன்னது !
~~~கல்பனா பாரதி~~~