காட்டினிலே நந்தலாலா

மரங்களிலே ஒளிந்தொளிறும் நிலவினிலே
கிளைகளின் ஊடே கண்ணன் முகம் தெரியுதையா
மூங்கில் காட்டில் ஊடே ஊதும் காற்றின் ஒலியிலே
ஓடும் நதி சலசலக்கும் சலங்கை ஒலியினிலே
குழலூதும் சின்னக் கண்ணன் வரும் சப்தம் கேட்குதையா
காற்றில் மிதந்து வரும் மலர்கள் சுக நாற்றத்திலே
வனமாலை சூடிய கண்ணன் வருவதரிந்தேனையா
கானகத்து கார் இருளில் கண்ணன் வண்ணம் கண்டேனையா .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (13-Sep-14, 8:12 pm)
பார்வை : 103

மேலே