இதில் எது நீ - இராஜ்குமார்
இதில் எது நீ
=============
தனிமை உந்தன் நிழலோ
இத்தனை இனிமை இதயத்தில்
நிழலும் உந்தன் உறவோ
அத்தனை அழகு அருகினில்
உறவும் உந்தன் குரலோ
எத்தனை சிணுங்கல் பேச்சில்
குரலும் உந்தன் மூச்சோ
ஒருவித தேடல் செவியில்
உன்மூச்சும் எந்தன் சுவாசமோ
பலவித காதல் உயிரினில்
- இராஜ்குமார்
நாள் : 2 - 6 - 2011