மலடியின் தாலாட்டு
என் பிறப்புக்கு
பெருமை
தேடிக்கொண்டேன்
நான் என் பெண்மையை
உணர்ந்த போது......
மொட்டுக்கள்
பல விரிந்தன...
பட்டாம்பூச்சிகள்
சிறகடித்தன....
எண்ணங்கள்
எல்லை மீறின.....
என்
வறல் நிலத்திலும்
வசந்தகாலம்
துளிர் விட
தொடங்கிவிட்டது.....
திட்டியவர்கள்
திகைத்துப்போனார்கள்
சபித்தவர்கள்
சப்தமிழந்துப்போனார்கள்
ஒதுக்கி வைத்தவர்கள் கூட
இப்போது இல்லை......
உடலிலும்
உணர்விலும்
ஏதோ ஓர்
இரசாயனத்தாக்கம்
அடிக்கடி
புல்லரிக்கிறது.....
கண்ணாடி முன்
பல முறை
வெள்ளோட்டம்
அப்போதெல்லாம்
என் பெருத்த வயிறை
மறந்து தடவிக்கொடுக்கும்
கைகள்....
பிள்ளைக்கு பெயர்
வைத்தே
தீர்ந்து போனது
பேனா மை
இளைப்பாற இடம்
தேடியது
காகிதம்.....
இத்தனையும்
நடக்க
வேண்டும் என்பதே
என் அவா......
இந்த மலடியின்
கனவும்
மெய்ப்பட வேண்டும்...
காத்திருப்பேன்
எனக்கும் கூட
தாலாட்டுப்பாட
தெரியும்....!!!