நம்பிக்கை

ஆலயம் குடிகொள்ளும்
ஆண்டவன்
அருள் நிரம்பும் ஒளியாக
சுவாசிக்கும் காற்றாக
எங்கும் எல்லோர் மனமும்
நிறைவாக
கண்ணில் தெரியாக் காட்சியாக
கருணை எனும் வடிவில்

அலைபாயும் மக்கள்
மகிழ்ச்சியில் திளைக்கும்
மனங்கள்
கேட்டதும் கிடைக்கும் திருப்தி
சொல்லில் அடங்கா சந்தோசம்
சொர்க்கம் கண்ட சுகம்

ஆலயம் தரும் நிம்மதி
ஆனந்த திருப்தி
ஆண்டவன் சந்நிதானத்தில்
செல்வோம் சொல்வோம்
கேட்போம் கொள்வோம்

அசைக்க முடியா நம்பிக்கையில்
ஆண்டவன் அருள் நிரம்பும்
அள்ளித் தர அள்ளித் தர
அமைதியுடன் வாழ்வோம்
நம்பிக்கையே கடவுள் என்றால்
நல்லவையே எப்பொழுதும்

எழுதியவர் : நம்பிக்கை (15-Sep-14, 11:15 am)
Tanglish : nambikkai
பார்வை : 142

மேலே