தோல்வியும் உன்னிடம் தோற்று போகும் 555

தோழா...
நீ இன்றுவரை கடந்து வந்த
உன் தோல்விகளை திரும்பி பார்...
நீ எடுத்த முயற்சிகள்
உன் முன்னாள்...
பாத சுவடுகளில்
வைத்துகொள்...
உன் தோல்விகளை...
விரும்பி பார் விடாமல்
முயற்சித்து பார்...
வரும் தோல்விகள் கூட
உன்னிடம் தோற்று போகும்...
மலையில் இருந்து விழும்
அருவி தற்கொலை செய்யவில்லை...
விழுந்தும் நதியாக ஓடி
சமுத்திரமாக மாறும்போது...
விழுந்துவிட்டோம் என்று
வருந்துவதை தூக்கி ஏறி...
நீயும் ஓடு நாளை
சமுத்திரமாய் உன் வெற்றிகள்...
உன் பாதங்களுக்கு
கீழே...
சமுத்திரத்தில்
ஓடும் கப்பலை போல...
நீ உயர்ந்திருப்பாய்
உன் வாழ்வில்...
விட்டுவிடாதே உன்
முயற்சிகளையும் லட்சியங்களையும்.....