பூ அணியும் பூம்பாவாய்

பூ அணியும் பூம்பாவாய்
பூவைக்கு ஒரு பூ வேண்டுமா

உன் கஞ்சன முகம் கண்டு
தாமரையும் அஞ்சியதோ

மெல்லிய இதழ் அறிந்து
மல்லியும் தோற்றதோ

மென் சிரிப்பின் விரியலிலே
முல்லையும் வியந்ததோ

பளிச்சிடும் கண்கள் பார்த்து
நிலோத்பலம் வாடியதோ

மெருதுவான கன்னம் நோக்கி
ரோஜாவும் பயந்ததோ

உன் கேச மணம் நுகர்ந்து
செண்பகமும் தலை குனிந்ததோ

சங்கொத்த கழுத்து கண்டு
நந்திவட்டையும் நாணியதோ

இடையொன்று இல்லை என்று
வஞ்சியும் தோற்றதோ

எல்லா பூவும் நீ தானே
உன் உள்ளமும் அது தானே

எழுதியவர் : ரமணி (17-Sep-14, 6:19 am)
பார்வை : 155

மேலே