விடியாத இரவு வேண்டும்

..."" விடியாத இரவு வேண்டும் ""...

பருவங்கள் காத்துநிற்கும்
பள்ளியின் வாசலிது,,,
கேள்விகள் தோன்றும்முன்
பதில்கள் வந்துவிடும்
படபடப்பின் மிகுதியாலே
பதிலே கேள்வியாகும் ,,,

வெள்ளி குவளை பாலோடு
அன்னம்போல் நடந்துவர
எண்ணங்களோ குதிரைபோல்
தரையில் கால்பதியாமலே
முதலாம் இடம்தனை தேடி
மனங்கள் முந்திச்செல்லும்,,,

இரட்டைநிலை இடம்மாறியே
அவளை இருக்கச்சொல்லி
அவனோ இருப்புக்கொள்ளா
சேர்த்தெடுத்து கோர்த்துவைத்த
நேர்த்தியான வார்த்தையாவும்
வர மறுத்தே மெளனமாகும்,,,

பக்கமிருந்தும் வெக்கத்தினால்
என் செய்வானோ எனையவன்
தயக்கத்தோடே தானிருந்தாள்
தொட்டாலென்ன மறுப்பாளா
தொடச்சொல்லி அழைப்பாளா
செய்வதறியாது தவித்தானவன்,,,

விழிகள் செல்ல கதைசொல்ல
இடையில் சீண்ட விரல்செல்ல
இமைகள் மூடியே இணைசேர
இதழ்கள் கூடியே துணைசேர
உடை சரிந்து விடைசொல்ல
உடலை உடுத்திடும் உலகத்தில்,,,

இதுவே இதுதான் இன்பமென
இளமை மணத்து மேன்மைபெற
ஈருடல் கூடி மூவுயிர் தேடும்
பிறப்பின் ஒருபாதி மகத்துவம்
பூர்த்தியாக்கி புதுயுகம் நோக்கி
மொட்டுவிரியும் பொன்நாள் ,,,

மறக்கமுடியா நினைவுகளோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (17-Sep-14, 1:50 am)
பார்வை : 1673

மேலே