கடனாளி

மரங்களின் அழிவினால்
பொய்த்த மழையினால்
கடனாளியானது என் வாழ்க்கை...

இருக்கின்றவனின் ஏளன பார்வை
இல்லாதவன் மீது-அந்த நொடியில்
அடிமையாக்கபட்ட என் சுயமரியாதை....

என் அடிமைபட்ட வாழ்க்கை
வெட்கி தலை குனிகிறது வீதியில்
கடனாளி என்ற போர்வை போர்த்தி...

வீட்டில் உள்ள பொருளை
அடகு வைத்து திருப்ப வழியில்லா
ஏழை விவசாயியாய் உலவுகிறது
என் வாழ்க்கை வீதியில்....

உழைப்பு மட்டும் என்னுடையது
லாபம் மட்டும் மேல் தட்டு பையில்
கடன் மட்டும் எனக்கு மிச்சம்...

அஹிம்சையான அமைதி
கடனாளி என்ற கூரைகீழ் இருப்பதால்

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (17-Sep-14, 8:52 am)
பார்வை : 188

மேலே