உண்மைகள்

ஒப்பனையில் வருவது
கற்பனை
சொப்பனத்தில் காண்பது
தரிசனம்
ஒத்திகையில் பார்ப்பது
உறுதி
நிஜத்தில் நடப்பது
உண்மை
போகத்தில் வருவது
பருவம்
யோகத்தில் சேர்ப்பது
அதிஸ்டம்
மோகத்தில் அணைவது
காமம்
ஆர்வத்தில் எடுப்பது
முயற்சி
ஆணவத்தில் பிறப்பது
அகம்பாவம்
கோபத்தில் பேசுவது
வீம்பு
நியாயத்தில் தீர்ப்பது
நீதி
தர்மத்தில் தேடுவது
புண்ணியம்
தவத்தில் வேண்டுவது
வரம்
அன்பில் காண்பது
நம்பிக்கை
ஆசியில் கொடுப்பது
வாழ்த்து
கற்றதில் பெறுவது
ஞானம்
கவிதையில் படைப்பது
புலமை

எழுதியவர் : பாத்திமா மலர் (17-Sep-14, 11:11 am)
Tanglish : unmaigal
பார்வை : 116

மேலே