விழிகளின் வலிகள்

விழிகளின் வலிகள் .........


ஒரு கட்டம் வரை
விண்ணிலிருந்து வந்தவளோ ?
என்னில், பலருக்கும் இதே ஐயம்
கண்ணில் துளி கண்ணீர் கண்டதில்லை
மண்ணில் நான்  ஓர் துயரும் கொண்டதில்லை

கட்டம் கட்டமாய்  கட்டி கட்டம் கணிப்பார்
எனக்கோ துளியும் கட்டம் கணிப்பதில்
இட்டமும், நட்டமும் இருந்ததேயில்லை
அக்கட்டம் வரை மட்டும் ....

வசை திட்டும்,
வார்த்தைகளின்  கொட்டும்
கத்தியின் வெட்டும்
சமையல் சுடுதீ சுட்டும்
கல்வியின் கனவு கெட்டும்
வாய்க்கு வாய்க்காத அம்மா கை புட்டும்

இப்படி அத்தனையும்
எண்ண எண்ண
கரைபுரண்டெழுந்த
 கடல் நீராய்
கண்ணீர் கண்களில்
வந்துவந்து முட்டும் ....

உன் அறிமுகம்
கிட்டா நாட்களில்லெலாம்
விழிகளின் வலிகளதை
வடித்திட
மாறுதலாய்,
மனதிற்கு அரும் ஆறுதலாய்
கட்டித்தூங்கும்
தலையனையதில்
கொட்டித்தீர்ப்பேன் ..

உன் அறிமுகம் கிட்டிய பின்னர்
கண்கள் கண்ணீர் வடித்திடும்
நாட்களும் குறைந்தது
நாட்களில் நீண்டு 
வாரங்களை தாண்டி
மாத தவணைகள் ஆனது

தப்பி தவறி சிதறிட தயாராகும்
விழிகளின் வலிகளை

இதோ 
உன்
மொழியுரை ஒற்றி
வழிமுறை பற்றி
வரிகளாய்
வடிக்கின்றேன் .....

எழுதியவர் : (17-Sep-14, 12:17 pm)
பார்வை : 71

மேலே