ஒரு முறை சொல்லிவிடு
நான் விரும்பிய பாடலை
நீயும் விரும்பினாய்
நான் ரசித்த வான வில்லை
நீயும் ரசித்தாய்
நான் சுவாசித்த மலர்களையே
நீயும் நேசித்தாய்
நான் படித்த டால்ஸ்டாயை
நீயும் படித்தாய்
நான் ருசித்த பாரதியின்
கவிதையை நீயும் ருசித்தாய்
என்னை சுட்ட மழையில்
நீயும் நனைந்தாய்
எனக்கு பிடித்த வண்ணங்களையே
நீயும் அணிந்தாய்
எனக்கு பிடித்த எல்லாமே
உனக்கும் பிடிக்க
உன்னை பிடிக்கும் என்று
ஒருமுறையாவது சொல்லிவிடு
நான் வேறொருவனின் மனைவியாகுமுன்.