நீ உன்னையே தேவதையாக

செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.

அவற்றுள் ஒன்று:

உன் மேல் ஏதுமின்றி
மேகத்தின் மீது நின்று கொண்டு இருக்கும்
உன்னை ஒரு பெரும் சந்நியாசி
அளப்பதை,

நீ உன்னையே தேவதையாக...
சொர்க்கத்தில் காண்பதைத் தவிர,
வேறெதும் என்னை மிகவும் மகிழ்விக்காதென்று
உனக்குத் தெரியும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-14, 8:33 pm)
பார்வை : 99

மேலே