பணவீக்கம் குணமாக-நகைச்சுவை
கட்சித் தொண்டர்- :நம்ம கட்சித் தலைவராக டாக்டரை நியமித்தது பெரிய தொல்லையாக போய்விட்டது .
செயளாளர் : ஏன்யா அந்த ஆளுக்கு என்னதான் கொறைச்சல்
கட்சித் தொண்டர் : மருத்துவம் மட்டும் தெரிஞ்சாப் போதுமா பொருளாதாரத்தைப் பற்றி எதுவும் தெரிய வேண்டாமா
செயளாளர் : அப்படி என்ன நடந்தது
கட்சித் தொண்டர் 1: நேத்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம்னு யாரோ கேட்ட கேள்விக்கு அப்பப்போ தேவைப்படும் போது அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு.