புத்தம் புதிய ஆத்தி சூடி

"அ"ன்பான பார்வையால்
"ஆ "ட்கொண்டாய் என் மனதை!,
"இ"தயத்தில் குடிவைத்தேன்,
"ஈ" டில்லா இணையானாய்!,
"உ"யிராய் நினைத்தேன் உன்னை!,
"ஊ"டுருவி கலந்தாய் உதிரத்தில்!,
"எ"த்தனை ஜென்மம் எடுத்தாலும்
"ஏ"க பத்தினியாய் நீ வேண்டும்!,
"ஐ"ம்பொறி ஆட்சி கொண்டவள் நீ !,
"ஒ"ற்றையாய் நின்ற என்னை
"ஓ"டும் நதி நீராக்கினாய்!,
"ஔ"டதமாய் என் வாழ்வில் நீ !,
அதுவே என்னை உனதாக்கியது!.

எழுதியவர் : paarthee (19-Sep-14, 10:53 am)
பார்வை : 76

மேலே