சுவாமிநாதன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுவாமிநாதன் |
இடம் | : வலங்கைமான், திருவாரூர் மா |
பிறந்த தேதி | : 11-Jun-1964 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 20 |
நான் பொதுப்பணித்துறையில் வரைவாளராக பணியாற்றி வருகிறேன்
கதை கவிதைகளில் ஆர்வம் நிறைந்தவர்.
என்னுடைய முதல் முயற்சியாக "எழுத்து வலை தளத்தில்" கவிதைகள்
சமர்பித்திருக்கிறேன்
மேகமெங்கும் உன் நினைவு!,
மழைத்துளியில் உன் முகம் !,
நான் உன்னில் நனைத்தேன்
சந்தோஷமாய்!,
நீ எனக்குள் இறங்கி பிடித்தாய்
ஜலதோஷமாய் !.
ஊடலும் இல்லை !,
கூடலும் இல்லை !,
ஆனாலும் கசப்பதில்லை !,
இரு மன வாழ்க்கை !.
ஊடலும் இல்லை !,
கூடலும் இல்லை !,
ஆனாலும் கசப்பதில்லை !,
இரு மன வாழ்க்கை !.
கண்களுக்குள் ஊடுருவி
நுழையும் போதும்,
கைவிரல்கள் கோர்க்கும் போதும் ,
செவ்வரியாய் உன் இதழ்கள்
பார்க்கும் போதும் ,
மனசுக்குள் மௌனமாய் ஓடுதடி
விரசமில்லாத விரக நதி !.
"அ"ன்பான பார்வையால்
"ஆ "ட்கொண்டாய் என் மனதை!,
"இ"தயத்தில் குடிவைத்தேன்,
"ஈ" டில்லா இணையானாய்!,
"உ"யிராய் நினைத்தேன் உன்னை!,
"ஊ"டுருவி கலந்தாய் உதிரத்தில்!,
"எ"த்தனை ஜென்மம் எடுத்தாலும்
"ஏ"க பத்தினியாய் நீ வேண்டும்!,
"ஐ"ம்பொறி ஆட்சி கொண்டவள் நீ !,
"ஒ"ற்றையாய் நின்ற என்னை
"ஓ"டும் நதி நீராக்கினாய்!,
"ஔ"டதமாய் என் வாழ்வில் நீ !,
அதுவே என்னை உனதாக்கியது!.
கண்களுக்குள் ஊடுருவி
நுழையும் போதும்,
கைவிரல்கள் கோர்க்கும் போதும் ,
செவ்வரியாய் உன் இதழ்கள்
பார்க்கும் போதும் ,
மனசுக்குள் மௌனமாய் ஓடுதடி
விரசமில்லாத விரக நதி !.
எனது கண்ணீர் சொல்லும்
உன் நினைவு கதைகளை
கேட்டு கேட்டு,
என் தலையணைக்கும்
வந்தது உனது வாசம் !.
கானல் என்று தெரிந்தே
நீந்த நினைப்பதும்,
வேனல் என்று தெரிந்தே
வீழ்ந்து துடிக்க நினைப்பதும்,
காதலில் மட்டுமே சாத்தியம்!.