மனிதம் மறந்த எந்திர வாழ்க்கை மனிதன்

செந்நிற கதிரவனின்
செழுமையை ரசித்திராத.....
இரவு நிலவின்
இனிமையை உணர்ந்திராத....

பகலெல்லாம் இரவான
இரவெல்லாம் பகலான
எந்திர வாழ்க்கை....

பாதி வெந்த காய்கறிகள்
பசிப் போக்க....
உதிர்ந்த வியர்வை
எறும்பாய் மொய்க்க....
குளுகுளு அறையில்
குறைவில்லா கொட்டிய முடி...

நிமிடங்களின் துடிப்பு
இதய துடிப்பாய்...
எதிர்காலத்தை எண்ணி எண்ணி
நிகழ்காலத்தை வாழ்ந்திடாத....
அருகில் வசிக்கும் மனிதனை
தெரிந்திடாத நகர்வு....

சிரிப்பை மறந்து
சித்திரத்தை ரசித்த நாட்கள்...
எதையும் சாதித்திரா
அவசர ஓட்டம்...
இந்த எந்திர வாழ்வு.....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (19-Sep-14, 6:52 pm)
பார்வை : 283

மேலே