ஊரில் பார்க்கா அழகா நீ - இராஜ்குமார்
ஊரில் பார்க்கா அழகா நீ
=========================
காலடி பதியா மண்ணா நீ - என்
காலணி மிதிக்க மறுக்குது
கண்கள் காணா வானமா நீ - என்
இமைகள் ரசிக்க துடிக்குது
விரல்கள் தட்டா தூசா நீ - என்
கைகள் கடத்த நினைக்குது
இதயம் மீட்டா இசையா நீ - என்
செவிகள் மாயமாய் மறையுது
தாளில் படாத எழுத்தா நீ - என்
எண்ணம் முழுக்க மறக்குது
மலரில் வீசா வாசமா நீ - என்
நாசி நயமாய் நடுங்குது
நீரில் மூழ்கா கல்லா நீ - நான்
படித்த தத்துவம் தோற்குது
ஊரில் பார்க்கா அழகா நீ - என்
உயிரும் காதலில் உருகுது
- இராஜ்குமார்
நாள் : 26 - 5 - 2011