எந்த அழகு நிலையத்திலும்
கற்று கொடுப்பதில்லை
அம்மாக்கள் குழந்தைகளுக்கு
செய்யும் அழகு ஒப்பனைகளை

அழுவதும் சிரிப்பதும்
ஏன் என்று முதலில்
அறிவது அம்மாவின்
உணர்வு நரம்புகள்தான்

பருவம் கடந்தாலும்
குழந்தையாக
அம்மாவிடம் மட்டுமே
இருக்க தோன்றுகிறது

தோற்றாலும் ஜெயித்தாலும்
மற்ற உறவுகள் விட
அம்மா மட்டுமே
கடைசி வரை
அம்மாவாகவே இருக்கிறார்கள்

அம்மாவின் அரவணைப்பிற்கு
வேன்றுமென்றே அழுததுண்டு
இது அம்மாவிற்கும் தெரியும்

நெருப்பு நம் உள்ளங்கையில்
சுட்டு விழுவதற்கு முன்
இதயத்தில் சுட்டுவிட்டது
அம்மாக்களுக்கு

தூக்கத்தில் அழுதாலும்
தூரமாய் நின்று அழுதாலும்
துடைத்து கொள்ள தேடுவது
அம்மாவின் முந்தானையைதான்

குழந்தைகளின் உலகத்தில்
பிடித்ததை பிடிக்காதவை
அம்மாக்களுக்கும் அப்படியே

பஞ்ச பூதங்கள்
உயிர் வாழ போதாது
அம்மாவையும் சேர்த்து கொள்ள வேண்டும்

அளந்து பார்க்க முடியாது
அப்படியே அளந்து பார்த்தாலும்
கடவுளும் ஈடு இல்லை
அம்மாவை தராசில் நிறுத்தினால்...

எழுதியவர் : பாலமுதன் ஆ (19-Sep-14, 7:51 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 153

மேலே