உயிர்

பூபாள ராகமிசைத்த உன்
புன்சிரிப்பு ஓசையில்
கண் விழித்தேன்
கயல் விழி
நீ என் கை கோர்க்கும்
கனவு கண்டு!
மாலை பொழுதினில் மட்டும்
உன் முகம் காட்டி
நாளை வளர்த்துக் கொண்டே
செல்லுகிறாய் ..
உன் நினைப்பில்
நீளும் இரவுகளும்
மாளும் பொழுதுகளும்
தேயும் நிலவுகளும்
வளர்ந்து கொண்டே போகின்றன..
நீயோ தினமும்
கொஞ்சம் கொஞ்சமாய்..
கொஞ்சம் கொஞ்சமாய்..
என் உள்புகுந்து
என் உடலின் ..
உணர்வாய்.. கலக்கின்றாய்!
ஆம்..இப்போது
என் உயிரிலும் நீ கலந்தாய்!
இனி எப்போதும் என்னுடனே..
இனி எனை விட்டு நீ மறைந்தால்..
என் உயிர் பிரிந்து போகும் அன்றே !