காகிதம்

ஊர் உறங்கி விட்டது..
நான் விழித்திருக்கிறேன்..
பொழுது விடிந்து விட்டது..
இன்னும் இருளில்..நான்!
இல்லை என் பக்கத்தில்..நீ!

காணாமல் போன
என் கவிதைப் பெட்டகமே..
எந்த பழைய புத்தக கடையில்
போட்டார்களோ உன்னை!

பொட்டலம் மடிக்க பயன் பட்டாயோ
என் கண்ணே!
குப்பையில்தான் எறிந்தாரோ உன்னை..
சூறை காற்றினில் தொலைந்தாயோ
என் அழகுப் பெண்ணே!

காகிதங்கள் எது என் கைவந்து
சேர்ந்தாலும்..
யாரும் இல்லா நேரத்தில்
அதனை திருப்பி திருப்பி பார்க்கின்றேன !
அழிந்த கவிதை உனைத் தேடுகின்றேன்!
என்னையே அந்நேரம் மறக்கின்றேன்!

எழுதியவர் : karuna (20-Sep-14, 5:42 pm)
Tanglish : kaakitham
பார்வை : 156

மேலே